சுடச்சுட

    

    உலக தடகள சாம்பியன்ஷிப்: 400 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் நார்வேயின் வார்ஹோல்முக்கு தங்கம்

    By DIN  |   Published on : 11th August 2017 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    running

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் 400 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் நார்வே வீரர் கேர்ஸ்டன் வார்ஹோல்ம் தங்கம் வென்றார்.
    16-ஆவது தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் 400 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்ற வார்ஹோல்ம் 48.35 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். துருக்கியின் யஷ்மானி கோபெல்லோ 48.49 விநாடிகளில் 2-ஆவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
    இதே பிரிவில் கடந்த இரு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றிருந்த அமெரிக்காவின் கெரோம் கிளமென்ட் 48.52 விநாடிகளில் இலக்கை எட்டி 3-ஆவது இடத்தையே பிடித்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கமே கிடைத்தது. ஹாட்ரிக் தங்கம் வெல்லும் கனவோடு களம்புகுந்த கிளமென்டுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
    மகளிர் 400 மீ. ஓட்டம்: மகளிர் 400 மீ. ஓட்டத்தில் அமெரிக்காவின் பில்லிஸ் பிரான்சிஸ் 49.92 விநாடிகளில் இலக்கை எட்டி 'பெர்சனல் பெஸ்ட்' சாதனையோடு தங்கம் வென்றார். பஹ்ரைன் வீராங்கனை சல்வா ஈத் நாஸர் 50.06 விநாடிகளில் இலக்கை எட்டியதன் மூலம் தேசிய சாதனையோடு வெள்ளிப் பதக்கம் வென்றார். அமெரிக்காவின் அலிசன் பெலிக்ஸ் 50.08 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai