சுடச்சுட

    

    சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்தியா ஓர் இடத்தை இழந்து 97-ஆவது இடத்தில் உள்ளது.
    கடந்த மாதம் 96-ஆவது இடத்தை எட்டிய இந்திய அணி, இந்த மாதம் இதுவரையில் எந்தப் போட்டியிலும் பங்கேற்காததால், ஓர் இடத்தை இழந்திருக்கிறது.
    கன்காப் தங்கக் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் கனடா 5 இடங்கள் ஏற்றம் கண்டு 95-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
    ஆசிய அணிகள் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்திய அணி 12-ஆவது இடத்தில் உள்ளது. ஈரான் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் சர்வதேச தரவரிசையில் ஈரான் 24-ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    பிரேசில் அணி, ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜெர்மனி 2-ஆவது இடத்திலும், ஆர்ஜென்டீனா, ஸ்விட்சர்லாந்து, போலந்து ஆகியவை முறையே 3, 4, 5-ஆவது இடங்களிலும் உள்ளன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai