சுடச்சுட

  
  viswanatha

  சின்கியூபீல்டு கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பிரான்ஸின் மேக்ஸைம் வச்சியர், ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியன் ஆகியோர் தலா 4.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.
  அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 7-ஆவது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த், ரஷியாவின் நெபோம்நியாக்ஷியை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் லெவோன் ஆரோனியன், அமெரிக்காவின் ஹிகாரு நாகமுராவைத் தோற்கடித்தார்.
  7-ஆவது சுற்றின் எஞ்சிய ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இன்னும் இரு சுற்றுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 4-ஆவது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் பாபியானோ கருணா, ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும், ரஷியாவின் பீட்டர் ஸ்விட்லர் 3 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திலும் உள்ளனர்.
  ரஷியாவின் நெபோம்நியாக்ஷி, ஹிகாரு நாகமுரா, அமெரிக்காவின் வெஸ்லே சோ ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தில் உள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai