Enable Javscript for better performance
பாட்மிண்டன் தரவரிசை: எச்.எஸ்.பிரணாய் முன்னேற்றம்- Dinamani

சுடச்சுட

    
    hspranye

    சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் 2 இடங்கள் முன்னேறி 15-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
    கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றது, ஆக்லாந்து ஓபனில் காலிறுதி வரை முன்னேறியது ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளார் பிரணாய்.
    இந்தியாவின் செளரவ் வர்மா 5 இடங்கள் முன்னேறி 32-ஆவது இடத்தையும், காஷ்யப் ஓர் இடம் முன்னேறி 46-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
    அஜய் ஜெயராம், சமீர் வர்மா ஆகியோர் தலா ஓர் இடத்தை இழந்து முறையே 17 மற்றும் 29-ஆவது இடங்களில் உள்ளனர். ஸ்ரீகாந்த் தொடர்ந்து 8-ஆவது இடத்திலேயே இருக்கிறார்.
    மகளிர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் முறையே 5 மற்றும் 16-ஆவது இடங்களைத் தக்கவைத்துக் கொண்டனர்.
    மகளிர் இரட்டையர் தரவரிசையில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி 25-ஆவது இடத்தில் உள்ளது. கலப்பு இரட்டையர் தரவரிசையில் பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி தொடர்ந்து 20-ஆவது இடத்தில் உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai