Enable Javscript for better performance
புரோ கபடி: ஜெய்ப்பூருக்கு முதல் வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    kabadi

    நாகபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய புணேரி பால்டான்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள்.

    5-ஆவது சீசன் புரோ கபடி போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 30-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.
    இந்த சீசனில் இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜெய்ப்பூர் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள புணேரி பால்டான் அணிக்கு இது 3-ஆவது தோல்வியாகும்.
    நாகபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் முதல் நிமிடத்திலேயே ரைடின் மூலம் புள்ளிகளைப் பெற்றன. 3-ஆவது நிமிடத்தில் புணேரி பால்டான் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அந்த அணியின் கிரிஸ் எர்னாக், சந்தீப் நர்வால் ஆகியோர் ஜெய்ப்பூர் வீரர்களை மடக்கிப் பிடிக்க, 6-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து கடுமையாகப் போராடிய ஜெய்ப்பூர் அணி 9-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை (6-6) சமன் செய்தது. இதன்பிறகு புணேரி பால்டான் மீண்டும் முன்னிலை பெற, ஜெய்ப்பூர் அணி மீண்டும் ஸ்கோரை சமன் செய்தது. ஜெய்ப்பூர் வீரர் சாந்தப்பன செல்வம் (தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்), தனது அபார டேக்கிள் மூலம் 3 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஜெய்ப்பூர் அணி 14-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே புணேரி பால்டான் அணியை ஆல் அவுட்டாக்கிய ஜெய்ப்பூர் அணி 17-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெய்ப்பூர் அணி 20-11 என்ற கணக்கில் முன்னிலை பெற, மறுபுறம் போராடிய புணே அணியால் மோசமான நிலையில் இருந்து மட்டும்தான் மீள முடிந்தது. தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இறுதியில் ஜெய்ப்பூர் அணி 30-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது. ஜெய்ப்பூர் தரப்பில் மஞ்ஜித் சில்லார் 9 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார்.
    தமிழ் தலைவாஸ் வெற்றி
    மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 29-24 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியைத் தோற்கடித்தது. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
    இன்றைய ஆட்டம்
    குஜராத்-யு மும்பா
    இடம்: ஆமதாபாத்
    நேரம்: இரவு 8
    நேரடி ஒளிபரப்பு:
    ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai