சுடச்சுட

    

    மான்ட்ரியால் மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் ஃபெடரர், நடால்

    By DIN  |   Published on : 11th August 2017 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tennis

    பீட்டர் போலன்ஸ்கைக்கு எதிரான 2-ஆவது சுற்றில் ஆக்ரோஷமாக ஆடிய ரோஜர் ஃபெடரர்.

    மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபேல் நடால் உள்ளிட்டோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
    கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆவது சுற்றில் ரோஜர் ஃபெடரர் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் கனடாவின் பீட்டர் போலன்ஸ்கையை வீழ்த்தினார்.
    போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும்
    ஃபெடரர், தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரரை சந்திக்கிறார். முன்னதாக ஃபெரர் தனது 2-ஆவது சுற்றில் 7-6 (7), 3-6, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜேக் சாக்கை வீழ்த்தினார். போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரஃபேல் நடால் தனது 2-ஆவது சுற்றில் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் போர்னா கோரிச்சை தோற்கடித்தார். நடால் தனது 3-ஆவது சுற்றில் கனடாவின் டெனிஸ் ஷபலோவை சந்திக்கிறார். முன்னதாக ஷபலோவ் 4-6, 7-6 (8), 6-4 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை வீழ்த்தினார்.
    பிரான்ஸ் வீரர் கேல் மான்பில்ஸ் கடும் போராட்டத்துக்குப் பிறகு 6-7 (4), 7-5, 7-6 (6) என்ற செட் கணக்கில் ஜப்பானின் நிஷிகோரியை வீழ்த்தினார். போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-3, 4-6, 7-6 (3) என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டை தோற்கடித்தார்.
    ஸ்வெரேவ் தனது 3-ஆவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை சந்திக்கிறார். கிர்ஜியோஸ் தனது 2-ஆவது சுற்றில் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் செர்பியாவின் விக்டர் டிராய்க்கியை வீழ்த்தினார்.


     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai