Enable Javscript for better performance
8 நகரங்களில் சைக்கிள் சாம்பியன்ஷிப்- Dinamani

சுடச்சுட

    

    சாம்பியன்ஸ் ஸ்போர்ட்டிவ் சீரிஸ் என்ற பெயரில் இந்தியாவின் 8 நகரங்களில் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.
    இந்தியன் டெரெய்ன் பேஷன் லிமிடெட், மோன்ட்ரா ஆகியவற்றின் சார்பில் இந்திய சைக்கிள் சம்மேளன ஆதரவுடன் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதில் 100 கி.மீ., 50 கி.மீ. என இரு பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. 100 கி.மீ. போட்டியில் ஒவ்வொரு நகரங்களிலும் முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்கள் தில்லியில் நடைபெறும் இறுதிச் சுற்றில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
    இந்தப் போட்டியின் முதல் சுற்று வரும் 20-ஆம் தேதி பெங்களூரிலும், 2-வது சுற்று வரும் 27-ஆம் தேதி குருகிராமிலும் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 3-ஆம் தேதி தில்லியிலும், செப்டம்பர் 10-ஆம் தேதி ஹைதராபாதிலும், செப்டம்பர் 17-ஆம் தேதி மும்பையிலும், செப்டம்பர் 28-ஆம் தேதி புணேவிலும் போட்டி நடைபெறுகிறது.
    அக்டோபர் 8-இல் சென்னையில் போட்டி நடைபெறுகிறது. இதில் கோட்டூர்புரத்தில் தொடங்கி மாமல்லபுரம் வரை சென்று திரும்ப வேண்டும். கடைசிச் சுற்று அக்டோபர் 15-ஆம் தேதி சண்டீகரில் நடைபெறுகிறது. தில்லியில் நடைபெறும் இறுதிச் சுற்றுக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
    போட்டி நடைபெறும்போது மருத்துவ வசதி, தொழில்நுட்ப வசதி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai