சுடச்சுட

  

  தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாடும் முரளி விஜய்!

  By எழில்  |   Published on : 11th August 2017 05:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vijay77

   

  இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியிலிருந்து தொடக்க வீரர் முரளி விஜய் விலகினார். அவருக்குப் பதிலாக ஷிகர் தவன் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின்போது முரளி விஜய்க்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் முழுமையாக மீளவில்லை. இதையடுத்து அவருக்கு டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். 

  இந்நிலையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 போட்டியில் இணைந்துள்ளார் முரளி விஜய். நேற்று நடைபெறவிருந்த கோவை கிங்ஸ்-மதுரை சூப்பர்ஜயன்ட் அணிகள் இடையிலான ஆட்டம் இடைவிடாத மழை காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. கோவை கிங்ஸ் அணியில் விஜய் இடம்பெற்றிருந்தார்.

  இதுபற்றி விஜய் கூறும்போது: என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிக்க இது சரியான வாய்ப்பு. இன்னமும் நான் நூறு சதவிகிதம் குணமடையவில்லை. ஆனா மனதளவில் தயாராக உள்ளேன். 

  இங்கு ஆரம்பித்து படிப்படியாக முழு உடற்தகுதியை அடைந்து அடுத்தக்கட்டம் செல்லவுள்ளேன். முழுமையாகக் குணமானபிறகு பிசிசிஐயிடம் என் நிலை குறித்து தெரிவிப்பேன் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai