Enable Javscript for better performance
இந்தியன் வங்கி சார்பில் பள்ளிகள் இடையிலான டி20 கிரிக்கெட்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியன் வங்கி சார்பில் பள்ளிகள் இடையிலான டி20 கிரிக்கெட்

    By DIN  |   Published on : 12th August 2017 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியன் வங்கி கோப்பைக்கான பள்ளிகள் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி வரும்16-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்தியன் வங்கி செய்துள்ளது.
    பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஹாக்கி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளை இந்தியன் வங்கி விளையாட்டு குழு நடத்தி வருகிறது.
    இந்த நிலையில் பள்ளிகள் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியை முதல்முறையாக நடத்தவுள்ளது. இதில் சென்னையில் உள்ள 16 பள்ளிகள் பங்கேற்க உள்ளன. இந்த பள்ளிகள் அனைத்தும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்டவையாகும். 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டி நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அனைத்து ஆட்டங்களும் லயோலா கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்றன.
    போட்டிகளில் பங்கேற்கும் அணிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்களை இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் கிஷோர் காரத் வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், செயல் இயக்குநர்கள் ஏ.எஸ்.ராஜீவ், எம்.கே.பட்டாச்சாரியா, பொதுமேலாளர் மணிமாறன், இந்தியன் வங்கி விளையாட்டு கமிட்டி செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai