சுடச்சுட

    

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது காரைக்குடி காளை அணி.
    இதன்மூலம் இந்த சீசனில் 4-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது காரைக்குடி அணி.
    திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. அந்த அணியில் பாரத் சங்கர் 68 பந்துகளில் 7 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் குவித்தார்.
    காரைக்குடி தரப்பில் சாம், ஷாஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    பின்னர் ஆடிய காரைக்குடி அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக அனிருத்தா ஸ்ரீகாந்த் 42 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 60, விஷால் வைத்யா 19 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் குவித்தனர். ஷாஜன் 25 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் குவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai