சுடச்சுட

  
  kohli181881111111

   

  இந்தச் சாதனை எந்தவொரு டெஸ்ட் கேப்டனுக்கும் இருக்கமுடியாது. அதிலும் இந்திய அணி நெ.1 அணியாக இருக்கும் இந்த நேரத்தில்.

  இந்தியா-இலங்கை இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையின் பல்லகெலேவில் இன்று தொடங்கியுள்ளது. இது கோலி கேப்டனாக விளையாடும் 29-வது டெஸ்ட்.

  இதுவரை எந்தவொரு டெஸ்டிலும் அதற்கு முன்பு விளையாடிய அதே 11 பேரை கோலி தேர்வு செய்ததில்லை! வீரர்களின் மோசமான பங்களிப்பு, காயம், ஜடேஜாவுக்கு ஏற்பட்ட தடை போன்ற இதர அம்சங்கள் என கோலியின் இந்த நடவடிக்கைக்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். ஆனால் விஷயம் இதுதான். 29 முறையும் வெவ்வேறு அணியை களத்தில் நிறுத்தியுள்ளார் கோலி. குறைந்தபட்சம் ஒரு மாற்றமாவது இருக்கும். இதற்கு முன்பு கங்குலி தன்னுடைய முதல் 28 டெஸ்டுகளில் இதேபோல மாற்றங்களைச் செய்துள்ளார். அந்தச் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

  இது எப்படிச் சாத்தியமானது?

  இந்தத் தொடரையே எடுத்துக்கொள்வோம். இதற்கு முன்பு ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இடம்பெற்ற இந்திய அணிக்கும் இலங்கையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற இந்திய அணிக்கும் என்ன வித்தியாசம்? 

  ராஞ்சி டெஸ்டில் முரளி விஜய், கருண் நாயர், இஷாந்த் சர்மா ஆகியோர் விளையாடினார்கள். காலே டெஸ்டில் இந்த மூன்று பேருக்கும் பதிலாக முகுந்த், பாண்டியா, சமி ஆகியோர் இடம்பெற்றார்கள். அடுத்த கொழும்பு டெஸ்டில் முகுந்துக்குப் பதிலாக ராகுல் அணியில் இடம்பிடித்தார். பல்லகெலேவில் ஜடேஜாவுக்குப் பதிலாக குல்தீப் யாதவ். இப்படி, தான் கேப்டனாக இருந்த 29 டெஸ்டிலும் குறைந்தபட்சம் ஒரு மாற்றத்தையாவது செய்யவேண்டிய நிர்பந்தம் கோலிக்கு ஏற்பட்டுள்ளது. 

  இந்திய அணி அடுத்ததாக இந்தியாவில் இலங்கையுடம் மீண்டுமொரு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதிலும் நிச்சயம் ஒரு மாற்றமாவது இருக்க வாய்ப்புண்டு. குல்தீப் யாதவுக்குப் பதிலாக ஜடேஜா மீண்டும் அணியில் இடம்பிடிக்கக்கூடும். முரளி விஜய் முழு உடற்தகுதி அடைந்துவிட்டால் அவருக்கும் ஓர் இடம் நிச்சயம் கிடைக்கும். எனவே கோலி 30-வது முறையாகவும் அணியில் மாற்றம் செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai