சுடச்சுட

  

  லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் 4ஷ்400 மீ. தொடர் ஓட்டத்தில் இந்திய மகளிர் அணி ஓடுபாதையில் இருந்து விலகியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. அதேநேரத்தில் ஆடவர் 4ஷ்400 மீ. தொடர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் இந்திய அணி 10-ஆவது இடத்தையே பிடித்தது. இதனால் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

  உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் 200 மீ. ஓட்டத்தில் நெதர்லாந்து வீராங்கனை டேப்னே ஸ்கிப்பர்ஸ் தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்டார். அவர் 22.05 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப் பிடித்தார்.

  ராஜஸ்தான் மாநிலம் நாகவூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த லலித் மோடி, அந்தப் பதவியை ராஜிநாமா செய்ததோடு, ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான தொடர்பையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளார்.

  இந்தியாவில் வரும் நவம்பரில் நடைபெறவிருந்த ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, மலேசியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி, இந்தியாவில் விளையாட மறுத்ததைத் தொடர்ந்து போட்டி மாற்றப்பட்டுள்ளது.

  இலங்கைக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai