Enable Javscript for better performance
டிஎன்பிஎல்: கோவை வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 25-ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியைத் தோற்கடித்தது கோவை கிங்ஸ்.
    சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த திருவள்ளூர் வீரன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கேப்டன் அபராஜித் 31 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 60 ரன்களும், தன்வார் 22 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 55 ரன்களும் குவித்தனர். கோவை தரப்பில் விக்னேஷ், அஜித்ராம், சிவக்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    பின்னர் ஆடிய கோவை அணியில் முரளி விஜய் 44 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, சீனிவாசன் 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது கோவை. சீதாராம் 43 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் குவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai