சுடச்சுட

  

  தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 137 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை சூப்பர்ஜயன்ட் அணியைத் தோற்கடித்தது. தூத்துக்குடி அணிக்கு இது 7-ஆவது வெற்றியாகும்.
  திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அந்த அணியில் எஸ்.பி.நாதன் 77 ரன்கள் குவித்தார்.
  பின்னர் ஆடிய மதுரை அணி 8.5 ஓவர்களில் 59 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் அருண் கார்த்திக் 23 ரன்கள் எடுத்தார். தூத்துக்குடி தரப்பில் கணேஷ் மூர்த்தி 3 விக்கெட்டுகளையும், ஆஷிக் சீனிவாஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai