சுடச்சுட

    
    spt3

    ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய பாட்னா பைரேட்ஸ்-யு.பி.யோதா அணிகள்.

     

    5-ஆவது சீசன் புரோ கபடி போட்டியில் பாட்னா பைரேட்ஸ்-யு.பி.யோதா அணிகள் இடையிலான ஆட்டம் 27-27 என்ற புள்ளிகள் கணக்கில் டையில் முடிந்தது.

    ஆமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆடியபோதும், யு.பி.யோதா அணி இரண்டு, மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையிலேயே இருந்தது. 14 நிமிடங்கள் முடிவில் 9-7 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற யு.பி.யோதா அணி, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 13-10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
    பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 31-ஆவது நிமிடத்தில் யு.பி.யோதா அணி 22-17 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதன்பிறகு பாட்னா வீரர்களின் டேக்கிள்கள் மோசமாக அமைந்ததால், அந்த அணி 17-25 என்ற கணக்கில் பின்தங்கியது.
    எனினும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரைடர் பிரதீப் நர்வால், ஒரே நிமிடத்தில் மூன்று புள்ளிகளைப் பெற, பாட்னா சரிவிலிருந்து மீண்டது. கடைசி நிமிடத்தில் இரு புள்ளிகள் பின்தங்கியிருந்தது பாட்னா. கடைசி 10 விநாடிகளில் நர்வால் தனது ரைடின் மூலம் ஒரு புள்ளியைப் பெற, கூடுதலாக டெக்னிக்கல் புள்ளியும் கிடைத்தது. இதனால் ஆட்டம் 27-27 என்ற புள்ளிகள் கணக்கில் டையில் முடிந்தது.
    பிரதீப் நர்வால் இந்த ஆட்டத்தில் ரைடின் மூலம் 9 புள்ளிகளைப் பெற்றார். இதுதவிர இந்த சீசனில் ரைடின் மூலம் 50 புள்ளிகளைப் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். யு.பி.யோதா தரப்பில் ரைடர் நிதின் தோமர் 7 புள்ளிகளைப் பெற்றார்.
    இன்று விடுமுறை: திங்கள்கிழமை ஆட்டம் எதுவும் கிடையாது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-புணேரி பால்டான் அணிகளும், 2-ஆவது ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகளும் மோதுகின்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai