சுடச்சுட

  

  மான்ட்ரியால் மாஸ்டர்ஸ்: இறுதிச் சுற்றில் ஃபெடரர், ஸ்வெரேவ்

  By DIN  |   Published on : 14th August 2017 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt5

  இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்.

   

  மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

  கனடாவின் மான்ட்ரியால் நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ரோஜர் ஃபெடரர் 6-3, 7-6 (5) என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸியைத் தோற்கடித்தார்.
  இதன்மூலம் மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் போட்டியில் 6-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் ரோஜர் ஃபெடரர், அது குறித்து பேசுகையில், "இங்கு மீண்டும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
  மற்றொரு அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவை தோற்கடித்தார்.
  இதன்மூலம் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ ஆகியோருக்கு அதிர்ச்சித் தோல்வியளித்த ஷபோவெலாவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
  ஆட்டம் முடிந்த பிறகு பேசிய ஷபோவெலாவ், "கடந்த 5 நாள்களில் எனது டென்னிஸ் வாழ்க்கை முற்றிலும் மாறியிருக்கிறது' என்றார்.
  இறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரரும், அலெக்சாண்டர் ஸ்வெரேவும் மோதுகின்றனர். இதுவரை இவர்கள் இருவரும் 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அவையனைத்திலும் ரோஜர் ஃபெடரரே வெற்றி கண்டுள்ளார். அதனால் இந்தப் போட்டியிலும் ஃபெடரரே சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai