சுடச்சுட

    
    us

    மகளிர் 4ஷ்400 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனைகள்.

    லண்டனில் கடந்த 10 நாள்கள் நடைபெற்ற 16-ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவோடு முடிவுக்கு வந்தது.
    பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 10 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. கென்யா 5 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தையும், தென் ஆப்பிரிக்கா 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் 3-ஆவது இடத்தையும் பிடித்தன. சீனா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 5-ஆவது இடத்தைப் பிடித்தது. போட்டியை நடத்திய பிரிட்டன் 2 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 6-ஆவது இடத்தையே பிடித்தது.
    இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியோடு உலகின் மின்னல் வேக மனிதரான ஜமைக்காவின் உசேன் போல்ட் ஓய்வு பெற்றார். கடந்த 10 ஆண்டுகளாக உலக தடகளத்தின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த உசேன் போல்ட், இந்த முறை ஒரு வெண்கலப் பதக்கத்தோடு வெளியேறினார்.
    100 மீ. ஓட்டத்தில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட அவர், வெண்கலமே வென்றார். 4ஷ்100 மீ. தொடர் ஓட்டத்தில் தசைப்பிடிப்பால் இலக்கை எட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் போல்ட். அவர் தங்கம் வெல்லாத ஒரே உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இதுதான்.
    தங்கப் பதக்கத்தோடு ரசிகர்களிடம் இருந்து பிரியா விடை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட உசேன் போல்டின் கடைசிப் போட்டியில் காயம் விளையாடியதால், அவர் வலியோடு ஓய்வு பெற நேர்ந்தது.
    இந்தியா ஏமாற்றம்: இந்த முறை 38 நாடுகள் பதக்கப் பட்டியலில் இடம்பிடித்தன. ஆனால் இந்திய அணி வழக்கம்போல் இந்த முறையும் பதக்கமின்றி வெறுங்கையோடு நாடு திரும்பியிருக்கிறது.


     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai