Enable Javscript for better performance
டிஎன்பிஎல்: கோவை வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 28-ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியைத் தோற்கடித்தது கோவை கிங்ஸ். இதன்மூலம் 3-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது கோவை.
    சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் குவித்தது. அந்த அணியில் நிலேஷ் சுப்பிரமணியன் 56 பந்துகளில் 57 ரன்களும், கெளஷிக் 31 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்களும் குவித்தனர்.
    கோவை தரப்பில் ஹரீஷ் குமார் 4 விக்கெட்டுகளையும், விக்னேஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
    பின்னர் ஆடிய கோவை அணியில் முரளி விஜய் டக் அவுட்டானபோதும், சூர்யபிரகாஷ் 21 பந்துகளில் 30 ரன்களும், சீதாராம் 41 பந்துகளில் 44 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்க, அந்த அணியின் வெற்றி எளிதானது.
    பின்னர் வந்த அக்ஷய் சீனிவாசன் 28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ரன்களை விளாச, 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது கோவை.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai