சுடச்சுட

  

  டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் கனடாவுக்கு எதிரான உலக குரூப் பிளே ஆப் சுற்றில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
  இந்தியாவின் முன்னணி ஒற்றையர் பிரிவு வீரரான யூகி பாம்ப்ரி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அதேநேரத்தில் மூத்த வீரரான லியாண்டர் பயஸ், தரவரிசையில் பின்தங்கியிருப்பதால், அணியில் சேர்க்கப்படவில்லை.
  இதேபோல் சர்வதேச தரவரிசையில் 495-ஆவது இடத்தில் இருக்கும் சாகேத் மைனேனியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் (தரவரிசை-220), சுமித் நாகல் (261), ஸ்ரீராம் பாலாஜி (291), விஷ்ணு வர்தன் (410), சசிக்குமார் முகுந்த் (440) ஆகியோர் தரவரிசையில் சாகேத் மைனேனியைவிட முன்னிலையில் உள்ளனர். எனினும் மைனேனி, ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளிலும் ஆடக்கூடிய காரணத்தால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
  இரட்டையர் பிரிவில் மைனேனியும், ரோஹன் போபண்ணாவும் இணைந்து ஆடவுள்ளனர். அதேநேரத்தில் பாலாஜி, குன்னேஸ்வரன் ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்தப் போட்டி கனடாவின் எட்மான்டன் நகரில் வரும் செப்டம்பர் 15 முதல் 17 வரை நடைபெறவுள்ளது.
  அணி விவரம்: யூகி பாம்ப்ரி, ராம்குமார், சாகேத் மைனேனி, ரோஹன் போபண்ணா. மாற்று வீரர்கள்: பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், ஸ்ரீராம் பாலாஜி.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai