Enable Javscript for better performance
மான்ட்ரியால் மாஸ்டர்ஸ்: ஸ்வெரேவ் சாம்பியன்: ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    மான்ட்ரியால் மாஸ்டர்ஸ்: ஸ்வெரேவ் சாம்பியன்: ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி

    By DIN  |   Published on : 15th August 2017 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tennis

    கோப்பையுடன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்.

    மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
    கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரருக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
    இதன்மூலம் தொடர்ச்சியாக 10-ஆவது வெற்றியைப் பெற்ற ஸ்வெரேவ், ரோஜர்
    ஃபெடரரின் தொடர் வெற்றிக்கு (16 வெற்றிகள்) முற்றுப்புள்ளி வைத்தார். இதுதவிர தரவரிசையில் 7-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
    வெற்றி குறித்துப் பேசிய ஸ்வெரேவ், 'கடந்த வாரம் வாஷிங்டனில் பட்டம் வென்ற நிலையில், இப்போது மான்ட்ரியால் மாஸ்டர்ஸில் சாம்பியனாகியிருப்பது வியப்பாக இருக்கிறது. எனது வாழ்வில் மிகச்சிறந்த டென்னிஸ் போட்டியை ஆடியதைப் போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டிருக்கிறது.
    தற்போது தரவரிசையிலும் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியிருக்கிறேன். இரு மாஸ்டர்ஸ் போட்டிகளில் வென்றிருப்பது ஒவ்வொரு வீரருக்குமே பெருமைப்படக்கூடிய விஷயமாகத்தான் இருக்கும்' என்றார்.
    மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையையும் 20 வயதான ஸ்வெரேவ் தட்டிச் சென்றுள்ளார்.
    போபண்ணா ஜோடி தோல்வி: ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றில் பிரான்ஸின் பியர் ஹியூஸ்-நிகோலஸ் மஹத் ஜோடி 6-4, 3-6, 10-6 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருந்த இந்தியாவின் ரோஹன் போபண்ணா-குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடியைத் தோற்கடித்தது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai