சுடச்சுட

    

    யுவராஜின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா?: எம்.எஸ்.கே.பிரசாத் பதில்

    By DIN  |   Published on : 15th August 2017 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    prasad

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து யுவராஜ் சிங்கிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்காக இப்போதும் இந்திய அணியின் கதவு திறந்தே இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
    இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில் மூத்த வீரரான யுவராஜ் சிங் இடம்பெறவில்லை.
    இதையடுத்து மூத்த வீரரான யுவராஜ் சிங்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவே பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக ஊடகங்களிலும் பல்வேறு கருத்துகள் வெளியாகின.
    இந்த நிலையில் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியிருப்பதாவது: யுவராஜ் சிங்கிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர்கள் யாருக்கும் இந்திய அணியின் கதவு மூடப்படவில்லை. அனைவருக்கும் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடும் உரிமை இருக்கிறது. அதேநேரத்தில் அணி தேர்வு என்று வரும்போது சிறந்த அணியையே தேர்வு செய்ய முயற்சிக்கிறோம் என்றார்.
    இந்திய அணியில் தோனியின் நிலை குறித்து எம்.எஸ்.கே.பிரசாத்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: தேர்வுக்குழு கூட்டத்தின்போது தோனியைப் பற்றி மட்டுமல்ல, ஒவ்வொரு வீரரைப் பற்றியும் விவாதிக்கிறோம்.
    தோனியின் எதிர்காலத்தைப் பற்றி கணிப்பது கடினம். இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். தோனி சிறப்பாக செயல்படுகிறபோது அவரை ஏன் நீக்க வேண்டும்? அவர் சிறப்பாக செயல்படாதபோது, அவருக்கு மாற்றாக யாரை களமிறக்குவது என்பது குறித்து நாங்கள் சிந்திப்போம்' என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai