இலங்கையில் இந்திய தேசியக் கொடி ஏற்றினார் விராட் கோலி (விடியோ) 

71-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, செவ்வாய்கிழமை தேசியக் கொடி ஏற்றினார்.
இலங்கையில் இந்திய தேசியக் கொடி ஏற்றினார் விராட் கோலி (விடியோ) 

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, நாட்டின் 71-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையின் கண்டியில் தேசியக் கொடி ஏற்றினார்.

இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் அந்நிய மண்ணில் ஒயிட்-வாஷ் வெற்றியைப் பதிவு செய்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணி புது வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.

இந்தத் தொடர் முழுவதும் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் இந்திய அணி வலுவானதாக இருந்தது. இந்தத் தொடர் வெல்ல இதுவே காரணமாக இருந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் 71-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் உள்ளது. 

எனவே, இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இலங்கையின் கண்டி நகரில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com