சுடச்சுட

  
  stepan

  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் சைக்கிள் பந்தய வீரர் ஸ்டீபன் ஊல்ட்ரிட்ஜ் (39) செவ்வாய்க்கிழமை காலையில் திடீரென மரணமடைந்தார். அவருடைய மரணத்துக்கான காரணம் தெரியவில்லை.
  ஸ்டீபன் 2004-இல் நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். இதுதவிர 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றதோடு, 2002 காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார்.
  ஸ்டீபனின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஜான் கோட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஸ்டீபன் தலைசிறந்த சைக்கிள் பந்தய வீரர். ஒலிம்பிக் சாம்பியனான அவர் அனைவருடைய மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
  அவர் எல்லா காலங்களிலும் ஒலிம்பிக் பணிகளுக்காக பாடுபட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய ஒலிம்பிக் அணிக்கு நிதியுதவி தேவைப்படுகிற போதெல்லாம், அவர் உதவியிருக்கிறார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  ஸ்டீபன், நியூ செளத் வேல்ஸ் அணிக்காகவும் சைக்கிள் போட்டியில் பங்கேற்றுள்ளார். அவருடைய மறைவுக்கு நியூ செளத் வேல்ஸ் சைக்கிளிங் அமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மற்றவர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் சைக்கிள் வீரராக திகழ்ந்தவர் ஸ்டீபன்' என கூறப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai