Enable Javscript for better performance
டிஎன்பிஎல்: இறுதிச் சுற்றில் தூத்துக்குடி- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் தகுதிச் சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியைத் தோற்கடித்தது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்.
    இதன்மூலம் முதல் அணியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது தூத்துக்குடி அணி. இந்த சீசனில் இதுவரை ஓர் ஆட்டத்தில்கூட தூத்துக்குடி அணி தோற்கவில்லை.
    சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தூத்துக்குடி அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 114 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கார்த்திக் 26 பந்துகளில் 33 ரன்களும், அந்தோணி தாஸ் 17 பந்துகளில் 27 ரன்களும் எடுத்தனர்.
    தூத்துக்குடி அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
    இதையடுத்து பேட் செய்த தூத்துக்குடி அணியில் வாஷிங்டன் சுந்தர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட, மறுமுனையில் நிதானமாக ஆடிய காந்தி 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக், தான் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார்.
    இதையடுத்து வாஷிங்டன் சுந்தருடன் ஜோடி சேர்ந்தார் அபிநவ் முகுந்த். இந்த ஜோடி அசத்தலாக ஆட, 12.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது தூத்துக்குடி அணி. வாஷிங்டன் சுந்தர் 36 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 73, அபிநவ் முகுந்த் 27 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai