சுடச்சுட

    
    hocky1

    இறுதி ஆட்டத்தில் மோதிய டான் போஸ்கோ-செயின்ட் ஜோசப் கல்லூரி அணிகள்.

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டியில் தருமபுரி மாவட்ட டான் போஸ்கோ கல்லூரி அணி முதலிடம் பெற்றது.
    சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரி அணி 2-ஆம் இடம் பிடித்தது.
    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி மற்றும் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் இந்தப் போட்டி நடைபெற்றது.
    திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 இடங்களில் இப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள கலை-அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி அணிகள் பங்கேற்றன.
    'நாக் அவுட்' முறையில் போட்டி நடைபெற்றது. முதல் அரையிறுதியில் தருமபுரி டான் போஸ்கோ கல்லூரி அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை நாசரேத் கல்லூரி அணியைத் தோற்கடித்தது.
    மற்றொரு அரையிறுதியில் சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரி அணி டைபிரேக்கர் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியை வீழ்த்தியது.
    இதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில், தருமபுரி டான் போஸ்கோ கல்லூரி அணியும், சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும் மோதின. இதில் தருமபுரி டான் போஸ்கோ அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
    திருச்சி ஜமால் முகமது கல்லூரி, சென்னை நாசரேத் கல்லூரி அணிகள் முறையே 3 மற்றும் 4-ஆம் இடங்களைப் பிடித்தன.
    முதலிடம் பிடித்த டான்போஸ்கோ அணிக்கு சுழற்கோப்பையுடன் ரூ.15 ஆயிரமும், 2-ஆம் இடம் பிடித்த செயின்ட் ஜோசப் அணிக்கு சுழற்கோப்பையுடன் ரூ. 10 ஆயிரமும்,
    3-ஆம் இடம் பிடித்த ஜமால் முகமது கல்லூரி அணிக்கு சுழற்கோப்பையுடன் ரூ.7 ஆயிரமும், 4-ஆம் இடம்பிடித்த நாசரேத் கல்லூரி அணிக்கு சுழற்கோப்பையுடன் ரூ.5 ஆயிரமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai