சுடச்சுட

    

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான வெளியேற்றும் சுற்றில் முதலில் பேட் செய்த காரைக்குடி காளை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது.
    திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த காரைக்குடி அணியில் தொடக்க வீரர்களில் ஒருவரான விஷால் வைத்யா 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    எனினும் மற்றொரு தொடக்க வீரரான அனிருத்தா 36 பந்துகளில் 5 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆதித்யா 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.
    கடைசிக் கட்டத்தில் கேப்டன் பத்ரிநாத் அதிரடியாக ஆட, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது காரைக்குடி. பத்ரிநாத் 25 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 42, ஷாஜன் 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    கோவை தரப்பில் கெளதம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai