சுடச்சுட

    

    டிஎன்பிஎல்: 2-ஆவது தகுதிச் சுற்றில் சூப்பர் கில்லீஸ்-கோவை மோதல்

    By DIN  |   Published on : 18th August 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது தகுதிச் சுற்று திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
    சூப்பர் கில்லீஸ் அணி, தூத்துக்குடி அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. மேலும் அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சூப்பர் கில்லீஸ் 114 ரன்களில் சுருண்டது. இது அந்த அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் லீக் சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணியை சூப்பர் கில்லீஸ் வீழ்த்தியிருக்கிறது. இது அந்த அணிக்கு சற்று நம்பிக்கையளிப்பதாக உள்ளது.
    இந்த ஆட்டத்தில் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்றால், 2-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பெருமையைப் பெறும். கடந்த ஆண்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சூப்பர் கில்லீஸ், அதில் தூத்துக்குடி அணியிடம் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.
    சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் கோபிநாத், அந்தோணி தாஸ், தலைவன் சற்குணம், சசிதேவ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் சாய் கிஷோர், அலெக்சாண்டர் உள்ளிட்டோரை நம்பியுள்ளது சூப்பர் கில்லீஸ்.
    அதேநேரத்தில் கோவை அணி முரளி விஜயின் வருகைக்குப் பிறகு விஸ்வரூபமெடுத்துள்ளது. கடைசி 3 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர வெளியேற்றும் சுற்றில் காரைக்குடி அணிக்கு எதிராக 194 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளது.
    அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் விஜய், சூர்யபிரகாஷ், அனிருத் சீதா ராம், விக்கெட் கீப்பர் ரோஹித் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர். கடந்தப் போட்டியில் காரைக்குடிக்கு எதிராக 46 பந்துகளில் சதமடித்த ரோஹித், சூப்பர் கில்லீஸ் பெளலர்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
    போட்டி நேரம்: இரவு 7.15
    நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai