சுடச்சுட

    

    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 43.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்திருந்தது.
    பர்மிங்காமில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களில் ஒருவரான ஸ்டோன்மேன் 8 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த வெஸ்ட்லேவும் 8 ரன்களில் நடையைக் கட்டினார்.
    இதையடுத்து அலாஸ்டர் குக்குடன் இணைந்தார் கேப்டன் ஜோ ரூட். இந்த ஜோடி சிறப்பாக ஆட, இங்கிலாந்து அணி 43.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. அலாஸ்டர் குக் 71, ஜோ ரூட் 74 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai