சுடச்சுட

    

    ரேபிட் செஸ் போட்டியின் கடைசி சுற்றில் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினிடம் தோல்வி கண்டார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த். இதனால் அவருக்கு இந்தப் போட்டியில் 8-ஆவது இடமே கிடைத்தது.
    அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசி நாளான வியாழக்கிழமை நடைபெற்ற 7 மற்றும் 8-ஆவது சுற்றுகளில் டிரா செய்த ஆனந்த், 9-ஆவது சுற்றில் செர்ஜி கர்ஜாகினிடம் தோல்வி கண்டார்.
    அதேநேரத்தில் ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியன் 7 மற்றும் 8-ஆவது சுற்றுகளில் வெற்றி கண்ட நிலையில், 9-ஆவது சுற்றில் டிரா செய்தார். இதன்மூலம் 12 புள்ளிகளைப் பெற்ற அவர் முதலிடம் பிடித்தார்.
    அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா, பாபியானோ கருணா ஆகியோர் தலா 11 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டனர். ரஷியாவின் நெபோம் நியாக்ஷி 10 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தையும், கியூபாவின் லீனியர் டொமினிகஸ் 9 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
    வியத்நாமின் லீ குயாங் லெய்ம், செர்ஜி கர்ஜாகின் ஆகியோர் தலா 8 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டனர். ஆனந்த், ரஷியாவின் கேரி காஸ்பரோவ், செக்.குடியரசின் டேவிட் நவாரா ஆகியோர் தலா 7 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai