சுடச்சுட

  

  நியூஸிலாந்தில் நடைபெறும் U-19 கிரிக்கெட் உலகக் கோப்பை: அட்டவணை வெளியீடு!

  By எழில்  |   Published on : 18th August 2017 04:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  india-u19

   

  2002, 2010 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் நியூஸிலாந்தில் U-19 உலகக்கோப்பை நடைபெறவுள்ளது. அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

  11-வது ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ளது. மொத்தம் 16 அணிகள் இந்தப் போட்டியில் பங்குபெறுகின்றன. 

  ஜனவரி 13 அன்று நியூசிலாந்து மற்றும் நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடைபெறுகிறது. பிப்ரவரி 3 அன்று இறுதிப் போட்டி. 

  மூன்று முறை இந்தப் போட்டியை வென்றுள்ள இந்திய அணி, கடந்தமுறை (2016) இரண்டாம் இடம் பிடித்தது. இந்தப் போட்டியில் ஜனவரி 14 அன்று தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கவுள்ளது இந்தியா.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai