சுடச்சுட

  

  இந்தியாவுடனான ஒருநாள், டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

  By எழில்  |   Published on : 18th August 2017 12:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  smith

   

  இந்த ஹோம் சீசனில் இந்திய அணி வரும் செப்டம்பர் முதல் டிசம்பர் கடைசி வரையிலான காலகட்டத்தில் 3 நாடுகளுக்கு எதிரான தொடர்களில் மொத்தமாக 23 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. 

  இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான தொடரின் 5 ஒருநாள் ஆட்டங்கள் சென்னை, பெங்களூரு, நாகபுரி, இந்தூர், கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெறும். டி20 ஆட்டங்கள் மூன்றும் ஹைதராபாத், ராஞ்சி, குவாஹாட்டியில் நடைபெறும். இந்தத் தொடர் செப்டம்பர் மாதத்தின் மத்தியில் தொடங்கும்.

  இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்குக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

  ஒருநாள் அணி: (கேப்டன்) ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், ஆஸ்டன் அகர், ஹிட்லன் கார்ட்ரைட், நாதன் கோல்டர் நைல், பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ் ஃபாக்னர், ஆரோன் ஃபிஞ்ச், ஜோஸ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், ஆடம் ஸம்பா.

  டி20 அணி: (கேப்டன்) ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், டேன் கிறிஸ்டியன், நாதன் கோல்டர் நைல், பேட் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்ச், டிராவிஸ் ஹெட், மோசஸ் ஹென்றிஹஸ், கிளன் மேக்ஸ்வெல், டிம் பெயின், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸம்பா.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai