சுடச்சுட

    

    இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

    By DIN  |   Published on : 19th August 2017 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியாவுக்கு எதிரான 5 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஃபாக்னர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
    இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஃபாக்னர், நாதன் கோல்ட்டர் நீல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஆல்ரவுண்டர்கள் ஆஷ்டன் அகர், ஹில்டன் கார்ட்ரைட் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 13 வரை நடைபெறவுள்ளது. ஒரு நாள் போட்டிகள் சென்னை, பெங்களூரு, நாகபுரி, இந்தூர், கொல்கத்தா ஆகிய நகரங்களிலும், டி20 போட்டிகள் ஹைதராபாத், ராஞ்சி, குவாஹாட்டி ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளன.
    ஒரு நாள் போட்டி அணி: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஆஷ்டன் அகர், ஹில்டன் கார்ட்ரைட், நாதன் கோல்ட்டர் நீல், பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ்
    ஃபாக்னர், ஆரோன் ஃபிஞ்ச், ஜோஷ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட்,ஆடம் ஸம்பா.
    டி20 அணி: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர் (துணை கேப்டன்), ஜேசன் பெஹ்ரன்டிராஃப், டேன் கிறிஸ்டியான், நாதன் கோல்ட்டர் நீல், பேட் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்ச், டிராவிஸ் ஹெட், மோசஸ் ஹென்ரிக்ஸ், கிளன் மேக்ஸ்வெல், டிம் பெய்ன், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸம்பா.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai