சுடச்சுட

    

    உயரம் குறைந்தோருக்கான உலக தடகளம்: அழகப்பா பல்கலை. வீரருக்கு தங்கம்

    By DIN  |   Published on : 19th August 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gold

    உயரம் குன்றியவர்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பாரா விளையாட்டுப் பயிற்சி மைய வீரர் ஏ.செல்வராஜுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தசொ. சுப்பையா.

    உயரம் குன்றியவர்களுக்கான உலக தடகளப்போட்டியில் ஈட்டிஎறிதலில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பாரா விளையாட்டுப் பயிற்சி மைய வீரர் ஏ.செல்வராஜ் தங்கம் வென்றுள்ளார்.
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் கோனாபட்டுக் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர், உயரம் குறைந்த (மாற்றுத்திறனாளி) விளையாட்டு வீரர். அழகப்பா பல்கலைக்கழக பாரா விளையாட்டுப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவருகிறார்.
    இந்நிலையில், கனடாவின் டொரன்டோ நகரில் கடந்த 4 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெற்ற உயரம் குன்றியவர்களுக்கான 7-ஆவது உலக தடகளப் போட்டியில் செல்வராஜ் பங்கேற்றார். இதில், ஈட்டி எறிதல் பிரிவில் 26.54 மீ. தூரம் எறிந்து முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
    உயரம் குன்றியோருக்கான தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் செல்வராஜ் பதக்கங்கள் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மேலும் டொரன்டோ போட்டியில் பங்கேற்ற இந்திய அணியின் முதன்மைப் பயிற்சியாளராக அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் எம். சுந்தர் செயல்பட்டார்.
    போட்டியில் பங்கேற்று திரும்பிய வீரர் செல்வராஜ் மற்றும் பயிற்சியாளர் சுந்தர் ஆகியோரை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சொ. சுப்பையா வெள்ளிக்கிழமை பாராட்டினார்.
    நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் வி. பாலச்சந்திரன், அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai