சுடச்சுட

    
    kholi

    ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
    கோலி 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். டேவிட் வார்னர் 861 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
    இந்திய விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி 12-ஆவது இடத்திலும், ஷிகர் தவன் 13-ஆவது இடத்திலும், துணை கேப்டன் ரோஹித் சர்மா 14-ஆவது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்தியர்கள் யாரும் முதல் 10 இடங்களில் இல்லை. புவனேஸ்வர் குமார் 15-ஆவது இடத்தில் உள்ளார்.
    அணிகள் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்திய அணி 114 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெல்லும்பட்சத்தில் மூன்றாவது இடத்தைத் தக்கவைக்க முடியும். மாறாக இந்தியா 3-2 என்ற கணக்கில் வெல்லுமானால், டெசிமல் புள்ளி அடிப்படையில் இங்கிலாந்திடம் மூன்றாவது இடத்தை இழக்க நேரிடும்.
    அதேநேரத்தில் சர்வதேச தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி, இந்தியாவுக்கு எதிரான தொடரில் குறைந்தபட்சம் இரு ஆட்டங்களிலாவது வென்றால் மட்டுமே 2019 உலகக் கோப்பை போட்டிக்கு நேரடித் தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும்.
    வரும் செப்டம்பர் 30-ஆம் தேதியன்று தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடித் தகுதி பெறும். இங்கிலாந்து அணி உலகக் கோப்பை போட்டியை நடத்துவதன் அடிப்படையில் ஏற்கெனவே நேரடித் தகுதி பெற்றுவிட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai