சுடச்சுட

    
    cricket

    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 122 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 470 ரன்கள் குவித்திருந்தது.
    அந்த அணியின் தொடக்க வீரர் அலாஸ்டர் குக் இரட்டைச் சதமடித்தார்.
    பர்மிங்காமில் பகலிரவாக நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 136 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்திருந்தது. அலாஸ்டர் குக் 153, டி.ஜே.மாலன் 28 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
    2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் மாலன் 112 பந்துகளில் அரை சதமடிக்க, குக் 339 பந்துகளில் இரட்டைச் சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 4-ஆவது இரட்டைச் சதம் இது.
    இங்கிலாந்து அணி 449 ரன்களை எட்டியபோது மாலனின் விக்கெட்டை இழந்தது. அவர் 65 ரன்கள் எடுத்தார். இதையடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த அணி 122 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 470 ரன்கள் எடுத்திருந்தது. அலாஸ்டர் குக் 222, ஜானி பேர்ஸ்டோவ் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai