Enable Javscript for better performance
செய்திகள் சில வரிகளில்...- Dinamani

சுடச்சுட

    

    *இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 3 போட்டிகள் டி20 தொடர் வரும் செப்டம்பரில் இந்தியாவில் தொடங்குகிறது. அது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், 'விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம்' என குறிப்பிட்டுள்ளார்.
    *இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியுடனான மோதல் காரணமாக தலைமைப் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே பதவி விலகினார். ஆனால் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹாவோ, 'சிலரிடம் அனில் கும்ப்ளே கடினமாக நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் எனக்கு அதுபோன்று தோன்றவில்லை' என தெரிவித்துள்ளார்.
    *ஜோர்டானில் நடைபெற்று வரும் ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் 10 பேர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
    *இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கே.எல்.ராகுல் 4-ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என இந்திய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் மணீஷ் பாண்டேவுக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்காது. அது குறித்து மணீஷ் பாண்டே கூறுகையில், '4-ஆவது இடத்தில் நான் விளையாடி வந்தேன். ஆனால் இப்போது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியிருக்கும் ராகுலை 4-ஆவது இடத்தில் களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதை நான் ஏற்றுக்கொண்டு, எனக்கான வாய்ப்புக்காக காத்திருப்பேன்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai