சுடச்சுட

  

  இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணி கடைசியாக ஜெயித்தது எப்போது?

  By சநகன்  |   Published on : 19th August 2017 05:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kohli90

   

  இந்தியா-இலங்கை இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.  

  இந்தியா - இலங்கை அணிகள் இதுவரை 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 83 முறையும் இலங்கை 55 முறையும் ஜெயித்துள்ளன.

  இந்திய அணி இலங்கையில் இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர்களில் 7 முறை பங்கேற்று இருமுறை மட்டுமே தோல்விபெற்றுள்ளது. இலங்கை அணி சிறப்பாக விளையாடிய 1993, 1997 காலக்கட்டங்களில் இரு ஒருநாள் தொடர்களில் இந்தியா தோல்வியைச் சந்தித்துள்ளது. 1985, 2006-ல் நடைபெற்ற இரு தொடர்கள் சமன் ஆகியுள்ளன. இலங்கையில் இந்திய அணி கடைசியாகப் பங்கேற்ற 4 ஒருநாள் தொடர்களிலும் தோல்வியைச் சந்தித்ததில்லை.

  இந்தியாவில் இலங்கை அணி 9 முறை ஒருநாள் தொடர்களில் விளையாடி 8 தொடர்களில் தோல்வி கண்டுள்ளது. 1997 தொடர் மட்டும் 1 - 1 என சமன் ஆகியுள்ளது. 

  இதைவைத்துப் பார்க்கும்போது 1997-க்குப் பிறகு இலங்கை அணி இந்தியாவை ஒருநாள் தொடரில் வெற்றி கண்டதில்லை. இதற்கு நடுவில் பல வீரர்கள் இலங்கை அணிக்காக விளையாடி ஓய்வும் பெற்றுவிட்டார்கள். 448 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர் மஹேலா ஜெயவர்தனே, ஒருமுறை கூட இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதில்லை.

  வரலாற்றை மாற்றி எழுதுமா தற்போதைய இலங்கை அணி? 

  இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர்கள்

  இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடர்கள்

  1985: 1 - 1 (3)
  1993: இலங்கை 2 - 1 (3)
  1997: இலங்கை 3 - 0 (3)
  2006: 0-0 (3)
  2008: இந்தியா 3 - 2 (5)
  2009: இந்தியா 4 - 1 (5)
  2012: இந்தியா 4 - 1 (5)

  இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடர்கள்

  1982: இந்தியா 3 - 0 (3)
  1986-87: இந்தியா 4 - 1 (5)
  1990: இந்தியா 2 - 1 (3)
  1994: இந்தியா 2 - 1 (3)
  1997: 1 - 1 (3)
  2005: இந்தியா 6 - 1 (7)
  2007: இந்தியா 2 - 1 (4)
  2009: இந்தியா 3 - 1 (5)
  2014: இந்தியா 5 - 0 (5)

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai