சுடச்சுட

  

  விளையாட்டுத் துறையில் சிறந்த பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சார்ய விருது பட்டியலில் இருந்து பாரா விளையாட்டுப் பயிற்சியாளர் சத்யநாராயணாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

  சத்யநாராயணா மீதான குற்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த ஆண்டுக்கான துரோணாச்சார்ய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து அவருடைய பெயரை நீக்கியதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சத்யநாராயணா, பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
  அதேநேரத்தில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது ஆகியவற்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைவருடைய பெயரையும் மத்திய விளையாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக விருது பெறுபவர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
  இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணாவுக்கு அர்ஜுனா விருதும், பாரா விளையாட்டு வீராங்கனை தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருதும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டபோதும், அதை விளையாட்டு அமைச்சகம் கருத்தில் கொள்ளவில்லை.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai