சுடச்சுட

    

    5-ஆவது சீசன் புரோ கபடி போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணி 37-32 என்ற புள்ளிகள் கணக்கில் யு-மும்பா அணியைத் தோற்கடித்தது.
    இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள தெலுகு டைட்டன்ஸூக்கு இது 2-ஆவது வெற்றியாகும். இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் வெற்றி கண்ட தெலுகு டைட்டன்ஸ் அணி, அதன்பிறகு இப்போதுதான் அடுத்த வெற்றியை ருசித்துள்ளது.
    உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் யு-மும்பா 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதற்குப் பதிலடியாக தெலுகு டைட்டன்ஸ் கேப்டன் ராகுல் செளத்ரி தனது அபார ரைடின் மூலம் 3 புள்ளிகளைப் பெற்றுத் தர, அந்த அணி 5-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
    இதன்பிறகு 9-ஆவது நிமிடத்தில் யு-மும்பாவை ஆல் அவுட்டாக்கிய தெலுகு டைட்டன்ஸ் அணி 12-7 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. அதேநேரத்தில் யு-மும்பா கேப்டன் அனுப் குமார் தனது சிறப்பான ரைடால் புள்ளிகளைப் பெற, ஓரளவு சரிவிலிருந்து மீண்ட அந்த அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 15-19 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது.
    பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்திலும் சிறப்பாக ஆடிய தெலுகு டைட்டன்ஸ் 27 நிமிடங்கள் முடிவில் 27-18 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதன்பிறகு யு-மும்பா ரைடர்களும், பின்கள வீரர்களும் ஒன்றிணைந்து அபாரமாக ஆட, 30-ஆவது நிமிடத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணி ஆல் அவுட்டானது. யு-மும்பா அணி தொடர்ந்து அபாரமாக ஆட, 32-ஆவது நிமிடத்தில் ஸ்கோர் சமநிலையை (27-27) எட்டியது. இதன்பிறகு சுதாரித்துக் கொண்ட ராகுல் செளத்ரி அபாரமாக ஆட, தெலுகு டைட்டன்ஸின் கை ஓங்கியது. இறுதியில் அந்த அணி 37-32 என்ற கணக்கில் யு-மும்பா அணியைத் தோற்கடித்தது. இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள யு-மும்பாவுக்கு இது 3-ஆவது தோல்வியாகும்.
    தெலுகு டைட்டன்ஸ் தரப்பில் ராகுல் செளத்ரி தனது அபார ரைடின் மூலம் 13 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார். அந்த அணியின் சோம்பிர் சேகர் தனது அற்புதமான டேக்கிள் மூலம் 8 புள்ளிகளைப் பெற்றுத்தந்தார்.
    ஹரியாணா வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் 36-29 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி.யோதா அணியைத் தோற்கடித்தது.

    இன்றைய ஆட்டங்கள்
    பாட்னா பைரேட்ஸ்-புணேரி பால்டான்
    நேரம்: இரவு 8
    யு.பி.யோதா-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
    நேரம்: இரவு 9, இடம்: லக்னெள
    நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai