சுடச்சுட

  

  தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸýக்கு எதிராக முதலில் பேட் செய்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது.

  சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணியில் வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அதன் ரன் வேகம் குறைந்தது.
  இதன்பிறகு கெüஷிக் காந்தி 19 பந்துகளில் 24, அபிநவ் முகுந்த் 38 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
  கேப்டன் தினேஷ் கார்த்திக் 17 ரன்களில் ஆட்டமிழக்க, எஸ்.பி. நாதன் 16 ரன்களில் வெளியேறினார். இறுதியில் தூத்துக்குடி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
  சூப்பர் கில்லீஸ் தரப்பில் சாய் கிஷோர், அருண் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai