சுடச்சுட

    

    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து.

    பர்மிங்காமில் பகலிரவாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 135.5 ஓவர்களில் 514 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அலாஸ்டர் குக் 243 ரன்களும், கேப்டன் ஜோ ரூட் 136 ரன்களும் குவித்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரோஸ்டான் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிளாக்வுட் 76 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் குவித்தபோதும், எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 47 ஓவர்களில் 168 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
    இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 346 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு "பாலோ-ஆன்' கொடுத்தது.
    அதைத்தொடர்ந்து 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 45.4 ஓவர்களில் 137 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் பிரத்வெயிட் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.
    இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், ரோலன்ட் ஜோன்ஸ், மொயீன் அலி ஆகிய தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அலாஸ்டர் குக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
    3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது போட்டி வரும் வெள்ளிக்கிழமை ஹெட்டிங்லேவில் தொடங்குகிறது.
    போத்தம் சாதனையை முறியடித்தார் ஸ்டூவர்ட் பிராட்: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்தார் ஸ்டூவர்ட் பிராட்.
    இதுவரை 107 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டூவர்ட் பிராட் 384 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக இயான் போத்தம் 383 விக்கெட்டுகளுடன் 2-ஆவது இடத்தில் இருந்தார். அதை இப்போது பிராட் முறியடித்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 492 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai