முடிந்தது டிஎன்பிஎல்: ஐபிஎல் வாய்ப்பு யார் யாருக்குக் கிடைக்கும்?

இந்தமுறையும் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களுக்கு ஐபிஎல் போட்டியில் வாய்ப்புகள் கிடைக்கும்...
முடிந்தது டிஎன்பிஎல்: ஐபிஎல் வாய்ப்பு யார் யாருக்குக் கிடைக்கும்?

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸைத் தோற்கடித்தது. இதன்மூலம் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் தூத்துக்குடி அணியிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்துள்ளது சூப்பர் கில்லீஸ்.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் ஆடிய சூப்பர் கில்லீஸ் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. சதீஷ் 16 பந்துகளில் 23, சரவணன் 10 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சரவணன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து இந்த டிஎன்பிஎல் போட்டியில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் மீது கவனம் குவிந்துள்ளது. கடந்த டிஎன்பிஎல் போட்டியினால் சிலர் ஐபிஎல் போட்டிக்குள் நுழைந்துள்ளார்கள். அதேபோல இந்தமுறையும் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களுக்கு ஐபிஎல் போட்டியில் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஎன்பில்: அதிக ரன்கள்

 பெயர் போட்டிகள்ரன்கள்ஸ்டிரைக் ரேட்அதிக ரன்சிக்ஸர்கள்
1

வாஷிங்டன் சுந்தர்

(தூத்துக்குடி)

9459154.5410717
2

கெளசிக் காந்தி

(தூத்துக்குடி)

9297125.3172*5
3அனிருதா (காரைக்குடி)6287147.937918
4அபரஜித் (திருவள்ளூர்)7277
150.54 
7214
5பரத் சங்கர் (திருச்சி)7265125.59112*13

டிஎன்பில்: அதிக விக்கெட்டுகள்

 பெயர்போட்டிகள்விக்கெட்டுகள்சிறந்த பங்களிப்பு
1சாய் கிஷோர் (சேப்பாக்கம்)1017
5/13 
2 

வாஷிங்டன் சுந்தர்

(தூத்துக்குடி)

915
3/34 
3அதிசயராஜ் டேவிட்சன் (தூத்துக்குடி)9154/25
4சிலம்பரசன் (திருவள்ளூர்)7123/25
5மோகன் பிரசாத் (காரைக்குடி)811
4/22 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com