சேஸிங் மன்னன் விராட் கோலி: தொடரும் சாதனைகள்!

சேஸிங்கில் தொடர்ந்து அசத்தி வரும் விராட் கோலி, நேற்றும் சில சாதனைகளைச் செய்துள்ளார்...
சேஸிங் மன்னன் விராட் கோலி: தொடரும் சாதனைகள்!

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இந்த ஆட்டத்தில் இந்தியா 127 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது. 200 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை குறைந்த ஓவர்களில் இந்தியா எட்டிய ஆட்டம் இதுதான். இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் 90 பந்துகளில் 3 சிக்ஸர், 20 பவுண்டரிகளுடன் 132 ரன்களும், கேப்டன் விராட் கோலி 70 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 197 ரன்கள் குவித்தது.

இலங்கையின் தம்புல்லா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்ய, இலங்கை அணி 43.2 ஓவர்களில் 216 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா 28.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ஷிகர் தவன் 90 பந்துகளில் 132, கோலி 70 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷிகர் தவன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சேஸிங்கில் தொடர்ந்து அசத்தி வரும் விராட் கோலி, நேற்றும் சில சாதனைகளைச் செய்துள்ளார். அவற்றின் தொகுப்பு:

சேஸிங்கில் விராட் கோலியின் சராசரி ரன்கள்

வீரராக மட்டும்: 59.98
கேப்டனாக - 123.55

ஒருநாள் போட்டிகளில் சேஸிங்கில் அதிகமான 50 + ரன்கள்

69 - டெண்டுல்கர்
50 - காலிஸ்
45 - கோலி
44 - கங்குலி 

கடந்த ஒரு வருடத்தில் வெற்றிகரமான சேஸிங்கில் விராட் கோலி எடுத்த ரன்கள்

85* vs நியூஸிலாந்து
154* vs நியூஸிலாந்து
122 vs இங்கிலாந்து
76* vs தென் ஆப்பிரிக்கா
96* vs வங்கதேசம்
111* vs மேற்கிந்தியத் தீவுகள் அணி
82* vs இலங்கை

சேஸிங்கில் வெற்றி பெற்றபோது எடுத்த ரன்கள்

டெண்டுல்கர் - 5490 ரன்கள் - சராசரி 55.45
பாண்டிங் - 4186 ரன்கள் - சராசரி 57.34
விராட் கோலி 4001 ரன்கள், சராசரி 100.02

ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி

சேஸிங்கில்: சராசரி 67.32, ஸ்டிரைக் ரேட் 93.71
வெற்றி பெற்ற சேஸிங்குகளில்: சராசரி 100.02, ஸ்டிரைக் ரேட் 98.01
கேப்டனாக: :  சராசரி 80.95, ஸ்டிரைக் ரேட் 99.93

சேஸிங்கில் வெற்றி பெற்றபோது விராட் கோலி

100 + ரன்கள்: 16 
90 + ரன்கள்: 2
80 + ரன்கள்: 6
70 + ரன்கள்: 5
60 + ரன்கள்: 3
50 + ரன்கள்: 2
40 + ரன்கள்: 3
30 + ரன்கள்: 8
20 + ரன்கள்: 5

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com