சுடச்சுட

  
  champion

  83-ஆவது அகில இந்திய ரயில்வே தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மேற்கு ரயில்வே அணியினர்.

  திருச்சியில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற 83-ஆவது அகில இந்திய ரயில்வே தடகளப் போட்டியில் மேற்கு ரயில்வே அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
  திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 17-ஆம் தேதி இந்தப் போட்டி தொடங்கியது. இதை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பி. உதயகுமார் ரெட்டி தொடங்கி வைத்தார்.
  இதில் பல்வேறு வகையான தனிநபர் போட்டிகள், குழு போட்டிகள் இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெற்றன. இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் முதலிடத்தைப் பிடித்த மேற்கு ரயில்வே அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது.
  ஆடவர் தனிநபர் பிரிவில் வட மேற்கு ரயில்வே வீரர் சித்தார்த் யாதவ் (1081 புள்ளிகள்) சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். மகளிர் தனிநபர் பிரிவில் வட மேற்கு ரயில்வேயின் கோமல் செளத்ரி (1063 புள்ளிகள்) சாம்பியன் பட்டம் வென்றார்.
  மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், ரயில்வே விளையாட்டுக் குழுமத் தலைவர் ஜே.பி. பாண்டே சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.
  திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பி. உதயகுமார்ரெட்டி, கூடுதல் கோட்ட மேலாளர் எச். மோகன்சர்மா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வில்சன் செரியன், உதவி ஒருங்கிணைப்பாளர்கள் தாரம்மாள், அண்ணாவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai