Enable Javscript for better performance
தோல்விகளில் இருந்து பாடம் கற்றிருக்கிறேன்: ஷிகர் தவன்- Dinamani

சுடச்சுட

    

    தோல்விகளில் இருந்து பாடம் கற்றிருக்கிறேன்: ஷிகர் தவன்

    By DIN  |   Published on : 22nd August 2017 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dhavan

    தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளேன் என இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் கூறியுள்ளார்.
    இலங்கையின் தம்புல்லாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியைத் தோற்கடித்தது. இதில் தவன் 90 பந்துகளில் 132 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
    இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: 2019 உலகக் கோப்பை போட்டி வரை இதேபோன்று சிறப்பாக விளையாட விரும்புகிறேன். அதுதான் எனது இலக்கும்கூட. ஏனெனில் நான் சரியாக விளையாடாவிட்டால், எனது இடத்தைப் பிடிக்க ஏராளமான திறமையான வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். தோல்விகள் எனக்கு நிறைய பாடம் கற்று தந்திருக்கிறது என்றார்.
    சில மாதங்களுக்கு முன்பு ஃபார்மை இழந்ததன் காரணமாக இந்திய அணியில் தனக்கான இடத்தையும் இழந்தார் தவன். அது குறித்து அவரிடம் கேட்டபோது, 'அதைப் பற்றி மீண்டும் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை. நான் சிறப்பாக விளையாடாத நேரத்தில் எனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டினேன். நான் சிறப்பாக ஆடுகிறபோதும், எனது ஆட்டத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்' என்றார்.
    மோசமான ஃபார்ம் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் ஷிகர் தவன். இலங்கைத் தொடரிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் கடைசிக் கட்டத்தில் முரளி விஜய்க்கு காயம் ஏற்பட்டதால், தவன் சேர்க்கப்பட்டார். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், டெஸ்ட் போட்டியில் பெரிய அளவில் ரன் குவித்ததோடு, இப்போது ஒரு நாள் கிரிக்கெட் அணியிலும் தனது இடத்தை வலுப்படுத்திக் கொண்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai