சுடச்சுட

    

    பெலாரஸ் டென்னிஸ் வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா, தனது குடும்பப் பிரச்னை காரணமாக நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
    தற்போது தனது கணவரை பிரிந்துள்ள அஸரென்கா, குழந்தையை கவனித்துக் கொள்வது தொடர்பான விவகாரத்தில் தீர்வு கிடைக்காததை அடுத்து போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
    கடந்த 2016 டிசம்பர் மாதம் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த அஸரென்கா, 2017 ஜூனில் போட்டிகளுக்கு திரும்பினார். இதனிடையே, விம்பிள்டன் போட்டிக்குப் பிறகு தனது கணவரை பிரிந்ததாக கடந்த வாரத்தில் தனது சுட்டுரைப் பக்கத்தில் (டுவிட்டர்) பதிவிட்டிருந்தார்.
    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எனது குடும்பச் சூழ்நிலையில் எழுந்துள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் இருப்பதால், நடப்பு அமெரிக்க ஓபன் போட்டியில் என்னால் பங்கேற்க இயலாது. போட்டி நடைபெறும் நியூயார்க் நகரத்திற்கு எனது மகன் லியோவை அழைத்து வரும் விவகாரம் குறித்து முன்னாள் கணவருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.
    2 முறை ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான அஸரென்கா, விம்பிள்டனுக்குப் பிறகு எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. முன்னாள் உலகின் முதல் நிலை வீராங்கனையான அவர், தற்போது 204-ஆவது இடத்தில் உள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai