சுடச்சுட

  

  'உலக குத்துச்சண்டையில் இந்தியா ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் வெல்லும்'

  By DIN  |   Published on : 23rd August 2017 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எதிர்வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் வெல்வார்கள் என்று இந்தியாவின் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  19-ஆவது உலக குத்துச்சண்டை சாம்பியஷிப் போட்டி வரும் 25-ஆம் தேதி ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் தொடங்கவுள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ), சிவ தாபா (60 கிலோ), மனோஜ் குமார் (69 கிலோ), அமித் பங்கால் (49 கிலோ), கவீந்தர் பிஷ்த் (52 கிலோ), கெளரவ் பிதூரி (56 கிலோ), சுமித் சங்வான் (91 கிலோ), சதீஷ் குமார் (91 கிலோவுக்கு மேல்) ஆகிய 8 பேர் அணி பங்கேற்கிறது.
  இந்நிலையில், இதுகுறித்து விஜேந்தர் சிங் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
  இந்த உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இந்திய அணியில் முதிர்ச்சியான வீரர்கள் உள்ளனர். சிவ தாபா, விகாஸ் கிருஷ்ணன், மனோஜ் குமார் ஆகியோருடன் இணைந்து ஏற்கெனவே விளையாடியுள்ளதால், அவர்களைப் பற்றி அறிவேன். இந்தியாவுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் வென்று தரும் திறமை அவர்களுக்கு உள்ளது.
  இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும்போது எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். அதை அவர்களும் உணர்வார்கள். ஆனால், அவற்றை மனதுக்கு ஏற்றிக் கொள்ளக் கூடாது. அனைத்தையும் மறந்து, போட்டியிலும், களத்திலும் மட்டுமே முழு கவனம் இருக்க வேண்டும்.
  விகாஸ் கிருஷ்ணனின் வளர்ச்சி என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவர் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார் என்று விஜேந்தர் சிங் கூறினார்.
  உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளது. 2009-இல் விஜேந்தர் சிங், 2011-இல் விகாஸ் கிருஷ்ணன், 2015-இல் சிவ தாபா அவற்றை பெற்றுத் தந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai