சுடச்சுட

  

  அமெரிக்காவில் நடைபெற்று வரும் கனெக்டிகட் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக். குடியரஸின் பெட்ரா குவிட்டோவா தனது முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார்.
  போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த குவிட்டோவா, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தனது முதல் சுற்றில் உலகின் 29-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் ஷுவாய் ஸாங்கை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில், 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஷுவாய் வெற்றி பெற்றார்.
  அவர் அமெரிக்காவில் களம் காணும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்குப் பிறகு பேசிய ஷுவாங், 'நியூ ஹேவனுக்கு திங்கள்கிழமை இரவு தான் வந்தேன். போதிய ஓய்வு இன்றி களம் கண்டபோதும் கிடைத்துள்ள வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
  இதனிடையே, முன்னதாக நடைபெற்ற மற்றொரு முதல் சுற்றில் கனடாவின் இயூஜின் பெளசார்டு 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் லெளரான் டேவிஸை வீழ்த்தினார். இதர ஆட்டங்களில் பெல்ஜியத்தின் கிர்ஸ்டென் ஃபிலிப்கென்ஸ் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் உக்ரைனின் லெஸியா ஸுரென்கோவையும், ருமேனியாவின் அனா போக்தான் 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ரஷியாவின் எலினா வெஸ்னினாவையும் வீழ்த்தினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai