சுடச்சுட

  

  முழங்கால் வலி காரணமாக சீனியர் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகுவதாக, நடப்புச் சாம்பியனான தீபிகா பலிக்கல் கூறினார்.
  74-ஆவது சீனியர் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி கிரேட்டர் நொய்டாவில் புதன்கிழமை தொடங்குகிறது. இதில் முதல் நாளில் தீபிகா தனது முதல் சுற்றை தொடங்க இருந்த நிலையில், விலகல் முடிவு குறித்து செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
  தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகுவது துரதிருஷ்டவசமானது. வரும் 29-ஆம் தேதி சீன ஓபன் போட்டியிலிருந்து புதிய சீசன் தொடங்குகிறது. எதிர்வரும் அந்த சீசனுக்கு முழுமையாகத் தயாராக விரும்புகிறேன். அடுத்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என முக்கியமான ஆண்டாக இருக்கும்.
  எனவே, அந்த சீசனுக்கும் நான் முழுமையாக தயாராக வேண்டுமென்றால், அதற்குரிய பயிற்சியை தொடங்குவதற்கு முன்பாக எனது முழங்கால் வலி தீர்வதற்கு சற்று ஓய்வு கொடுத்தாக வேண்டும். அதன் காரணமாகவே நடப்புச் சாம்பியனாக இருந்தும், தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பிலிருந்து விலகுகிறேன் என்று தீபிகா கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai