சுடச்சுட

  
  kabadi

  புரோ கபடி போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஃபார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 35-21 என்ற புள்ளிகள் கணக்கில் புணேரி பால்டான் அணியை வீழ்த்தியது.
  லக்னெளவில் இரு அணிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 13 ரைடு புள்ளிகள், 17 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், ஒரு கூடுதல் புள்ளி ஆகியவற்றை பெற்றது. புணே அணி, 11 ரைடு புள்ளிகள், 10 டேக்கிளி புள்ளிகள் பெற்றது.
  குஜராத் தரப்பில் அதிகபட்சமாக அதன் ரைடர் சுகேஷ் ஹெக்டே, 4 புள்ளிகள் எடுத்தார். தடுப்பாட்டக்காரரான ஃபாùஸல் அட்ராச்சலி 9 டேக்கிள் புள்ளிகளை அணிக்கு பெற்றுத்தந்தார். புணே தரப்பில், ரைடர் தீபக் ஹூடா 5 புள்ளிகளையும், தடுப்பாட்டக்காரர் சந்தீப் நர்வால் 4 புள்ளிகளையும் அதிகபட்சமாக பெற்றுத்தந்தனர். குஜராத் வீரர் ரோஹித் குலியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
  ஆட்டத்தின் முதல் 10 நிமிடத்தில் இரு அணி கேப்டன்களுமே புள்ளிகளை சேகரித்தனர். இந்நிலையில், தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தியதுடன், ரைடிலும் சிறப்பாக செயல்பட்ட குஜராத் அணி, முதல் பாதியில் 16-7 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
  பின்னர் நடைபெற்ற ஆட்டத்திலும் குஜராத்தின் கை ஓங்கியே இருந்ததால், இறுதியில் அந்த அணி 35-21 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.
  இதுவரை 9 ஆட்டங்களில் மோதியுள்ள குஜராத் 6 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்ததுடன் ஒரு ஆட்டத்தை சமன் செய்து ஏ பிரிவு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. புணே அணி 5 ஆட்டங்களில் மோதி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் அதே பிரிவின் 2-ஆவது இடத்தில் உள்ளது.

  இன்றைய ஆட்டங்கள்
  ஹரியாணா ஸ்டீலர்ஸ்- தபங் தில்லி
  நேரம்: இரவு 8
  யு.பி.யோதா-தமிழ் தலைவாஸ்
  நேரம்: இரவு 9, இடம்: லக்னெள
  நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai